Latestமலேசியா

சிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை

ஜோகூர்பாரு, ஏப் 24 – சிங்கப்பூரிலிருந்து திரும்பும் மலேசியர்கள் இனிமேல் தங்களது வீட்டில் தனித்திருப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. அந்த குடியரசில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர். வித்யானந்தன் கூறினார்.

சுல்தான் இஸ்கந்தார் சுங்க, குடிநுழைவு மற்றும் தடுப்பு கட்டிட வளாகம் சுல்தான் அபு பாக்கார் சுங்க, குடிநுழைவு தடுப்பு வளாகம் வாயிலாக ஜோகூர் திரும்புவோருக்கு புதிய நடைமுறை விதிமுறைகளை மாநில சுகாதாரத்துறை வரைந்துள்ளதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனை இனியும் ஏற்றுக்கொள்ளப்படாது. அதோடு தொற்று இல்லை என்ற அறிகுறியை கொண்டவர்கள் இனியும் தங்களது வீடுகளில் தனித்திருப்பதற்கு அனுமதியில்லை. நாட்டிற்கு திரும்பும் பிரஜைகள், நிரந்தர குடியிருப்பு வாசிகள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்போர் நுழைவுப் பகுதியில் உடலின் வெப்ப அளவை தெரிந்துகொள்ளும் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும்.

மருத்துவ பிரச்சனையை உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். மருத்துவ பிரச்சனை இல்லாதவர்கள் தனித்து வைக்கப்படும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். நாட்டிற்குள் நுழையும்போதே காய்ச்சலாக இருப்பவர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!