Latestஉலகம்

சிங்கப்பூரில் புதிதாக 448 பேருக்கு கோவிட்-19:  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,812 ஆக உயர்வு

சிங்கப்பூர், மே 21- சிங்கப்பூரில் இன்று மேலும் 448பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதன்வழி இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29,812 ஆக உயர்ந்தது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இன்று கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 13 பேர் சிங்கப்பூரியர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதியை கொண்டவர்கள். இவர்களைத் தவிர எஞ்சிய அனைவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களாவர். இன்று தொற்றுக்குள்ளான சிங்கப்பூரைச் சேர்ந்த 13பேரில் தாதியர் இல்லத்தில் தங்கியிருந்த மற்றும் பாலர் பள்ளி பணியாளர்களாவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!