Latestமலேசியா

சிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு

புத்ரா ஜெயா. ஜூன் 19 – கோவிட்-19 தொற்றுக்கு பின் எல்லையை திறப்பதற்காக ஆறு நாடுகளுடன் மலேசியா பேச்சுக்களை நடத்தி வருகிறது. சிங்கப்பூர், புருணை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவையே இந்த ஆறு நாடுகள் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் கூறினார்.
பரஸ்பர அடிப்படையில் மலேசியாவுக்கும் அந்த ஆறு நாடுகளுக்குமிடையிலான எந்தவொரு உடன்பாடு காணப்படும் என அவர் தெரிவித்தார். இந்த நாடுகளுக்கிடையே நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் குறித்து நாம் விவாதித்து இறுதி வடிவம் காண்பதற்கு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார். இந்த நாடுகளுடன் பேச்சுக்கள் இன்னமும் தொடக்க கட்டத்திலேயே இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இரண்டு தரப்புகளும் நிபந்தனைகளுக்கு இணக்கம் காண வேண்டியுள்ளது. இதனை செய்ய முடிந்தால் நாம் இந்த நாடுகளுடனான வர்த்தகம், கல்வி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளையும் திறக்கலாம் என நோர் இஷாம் கூறினார். சிங்கப்பூரில் கோவிட்-19 அதிகரித்துள்ளதால் அந்நாட்டுடனான எல்லையை திறப்பது பொருத்தமானதாக இருக்குமா என்றும் அவரிடம் வினவப்பட்ட போது அங்கு தொற்றுக்ககுள்ளானவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள். நம் நாட்டைப் போலவே அந்த நாட்டிலும் வெளிநாட்டினர்தான் அதிகமாக கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு வருவதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை. ஆனால் சிங்கப்பூர் மக்களை நாம் அனுமதிக்கலாம் என டாக்டர் நோர் இஷாம் மறுமொழி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!