Latestஉலகம்

சிங்கப்பூர் சீரமைப்புக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் வீட்டில் 14 நாட்கள் தனித்திருக்க உத்தரவு

சிங்கப்பூர், ஜூன் 26 – வெளிநாட்டிலிருந்து திரும்பிய சிங்கப்பூர் மக்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டில் தனித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை சிங்கப்பூர் சீரமைப்பு கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னமும் பின்பற்ற வேண்டும் என அந்த குடியரசின் சுகாதார அமைச்சும் தேர்தல் துறையும் அறிவித்துள்ளன.
61 வயதுடைய கென்னத் ஜெயரத்னம் அண்மையில் லண்டனிலிருந்து திரும்பினார். சீரமைப்பு கட்சி நிறுத்தவிருக்கும் வேட்பாளர்களில் கென்னத் ஜெயரத்னமும் ஒருவராக இருக்கக்கூடும் என தகவல்களில் வெளியாகியுள்ளன. 14 நாட்கள் வீட்டில் இருக்கும் உத்தரவை ரத்துச்செய்யும்படி அவர் கோரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இந்த விதிமுறைகயை மீட்டுக் கெள்ளமுடியாது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சும் தேர்தல்துறையும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளன.
அதோடு கென்னத் ஜெயரத்னம் கோவிட் பரிசோதனைக்கும் உள்ளாக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். எனினும் ஜூலை 10ஆம் தேதி தேர்தலில் போட்டியிடும் வகையில் அவர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும் என்றும் தேர்தல்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!