Latestமலேசியா

சிங்கப்பூர் தேர்தல் : இன்று வேட்பு மனுத் தாக்கல்

சிங்கப்பூர் , ஜூன் 30 – சிங்கப்பூர் பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று காலையில் நாடாளுமன்றத்தின் அனைத்து 93 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்தவுடன் 8 நாட்களுக்கு பிரச்சாரம் நடைபெறும். ஜூலை 10ஆம் தேதி வாக்களிப்பு தினமாகும். அன்றைய தினம் சிங்கப்பூரில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் லீ ஹிசியன் லூங் தலைமையிலான DAP எனப்படும் PEOPLE ACTION PARTY சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி அனைத்து தொகுதிகளையும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றுவந்துள்ள மக்கள் செயல் கடசி இம்முறையிலும் வெற்றி பெற்று ஆட்சியை தற்கவைத்துக்கொள்ளும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அந்த கட்சி இதுவரை நடத்துள்ள தேர்தல்களில் 60 விழுக்காட்டிற்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வந்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கு தொழிலாளர் கட்சி கடும் போட்டியை கொடுத்த போதிலும் அப்போதைய 89 நாடாளுமன்ற தொகுதிகளில் அக்கட்சி 6 இடங்களை மட்டுமே வென்றது. இம்முறைய PSP எனப்படும் சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அரசாஙகத்திற்கான மக்களின் ஆதரவு குறைந்து வருவதா அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும் இவ்வேளையில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதால் அந்த தேர்தல் இம்முறை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் இப்போதைய தவணைக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்வரை இருந்தபோதிலும் கோவிட் தொற்று அடுத்த ஆண்டு மேலும் மோசமடையும் என்பதோடு தற்போது அந்த குடியரசில் கோவிட் தொற்று குறைந்திருப்பதால் தேர்தல் நடத்துவற்கு இதுவே பொருத்தமான நேரம் என பிரதமர் லீ ஹிசியின் லூங் அண்மையில் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!