Latestஉலகம்

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; ஜூலை 10ஆம் தேதி தேர்தல்

சிங்கப்பூர், ஜூன் 23- சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடத்தும்பொருட்டு அந்த குடியரசின் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. அடுத்த செவ்வாய்க்கிழமை ஜூன் 30ஆம்தேதி வேட்பு மனுத்தாக்கலும் 9 நாள் பிரச்சாரத்திற்குப் பின் ஜூலை 10 ஆம்தேதி தேர்தல் நடைபெறும் என என அறிவிக்கப்பட்டது.
தற்போது கோவிட் -19 தொற்று பரவல் மிதமாக இருப்பதால் பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லுங் ( Lee Hsien Loong ) தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசாங்கம் கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதிலும் பொருளாதாரம் மற்றும வேலை வாய்ப்பு விவகாரங்களிலும் கவனம் செலுத்தும் என லீ கூறினார். நடப்பு அரசாங்கத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்வரை இருந்தாலும் இப்போதைய கோவிட் தொற்று ஒரு ஆண்டுவரை நீடிக்கும் என்பதால் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த்து முதல் அந்நாட்டில் நடத்தப்படும் 13ஆவது தேர்தலாக விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் அமையும். ஆகக்கடைசியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சியான PAP அனைத்து தொகுதிகளிலும் போட்டியை எதிர்நோக்கியது. மொத்தம் 93நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!