Latestமலேசியா

சிரம்பானிலிருந்து சுங்கை பட்டாணிக்கு பேருந்தில் சென்றவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகோள்

மார்ச் 16-இல் சிரம்பானிலிருந்து சுங்கை பட்டாணிக்கு PLQ 9689 என்ற எண் பட்டை கொண்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உடனடியாக கூலிம் சுகாதாரத் துறையை 04-4949121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த அலுவலகத்தின் முகநூலில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் என்ற காரணம் கூறப்பபடவில்லை. இருப்பினும் அது Covid 19 தொற்று தொடர்பானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மார்ச் 16 இல் அந்த பேருந்து இரவு மணி 8.30க்கு சிரம்பானிலிருந்து புறப்பட்டு ஷா ஆலாம், ஈப்போ, கமுந்திங், பாகான் செராய், பாரிட் புந்தார்,பட்டவெர்த் ஆகிய இடங்களில் நின்று இறுதியாக சுங்கை பட்டாணியைச் சென்றடைந்துள்ளது. அன்றுதான் கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவு தொடர்ப்பான அறிவிப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!