Latestமலேசியா

சிறிய – நடுத்தர தொழில்துறைக்கு சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் விரைவில் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப் 4 – நடப்பு சிரமத்தை குறைப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான சிறப்பு ஊக்குவிப்பு உதவி வழங்குவதற்கான திட்டத்தை நிதியமைச்சு தற்போது வரைந்து வருகிறது. இந்த உத்தேச உதவித் திட்டம் குறித்து அடுத்த வாரம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என நிதியமைச்சர் தெங்கு ஷப்ருல் அஜிஸ் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைக்கு தீர்வாக அரசாங்கத்தின் கூடுதல் உதவி அல்லது சலுகைத் திட்டமாக இது இருக்கும் என அவர் சொன்னார். அமைச்சரைவயிடம் தனது ஆலோசனையை நிதியமைச்சு முன்மொழியும். அமைச்சரவை அங்கீகரித்தால் அடுத்த வாரம் இந்த உதவித் திட்டம் குறித்து பிரதமர் அறிவிப்பார் என தெங்கு ஷப்ருல் கூறினார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கும் நிதியமைச்சுக்குமிடையே நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடலுக்குப் பின் சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் வரையப்பட்டிருப்பதாக தெங்கு ஷப்ருல் தெரிவித்தார். சிறிய நடுத்தர தொழில்துறையினரின் தேவை உட்பட பல்வேறு அம்சங்களையும்  கவனத்தில் எடுத்துக்கொள்ளும் வகையில் உத்தேச உதவித் திட்டம் இருக்கும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!