Latestமலேசியா

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் குஷாய்ரி காலமானர்

கோலாலம்பூர், ஜூலை 15- பேரா சிலிம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் குஷாய்ரி அப்துல் தாலிப் காலமானார். அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் மாரடைப்பினால இறந்தார். ஹவனா கெந்திங் ஹைலண்ட் கண்டிரி ரிசோட்டில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது 59 வயதுடைய குஷாய்ரி திடீரெனெ மயங்கி விழுந்தார்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் FINAS எனப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கபட்ட அவர் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தை அமைத்த ஒரு வாரகாலத்திற்குப் பின் அந்த பதவியிலிருந்து விலகினார். தஞ்சோங் மாலிம் அம்னோ டிவிசன் தலைவருமான அவர் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலிம் சட்டமன்ற தொகுதியில் 2,183 வாக்குகள் பெரும்பான்மையில் பி.கே.ஆர் கட்சியின் முகமட் அம்ரான் இப்ராஹிம் மற்றும் பாஸ் கட்சியின் சுல்பாஃடி ஜைனால் ஆகியோரை வீழ்த்தினார்.

இதனிடையே குஷாய்ரியின் குடும்பத்திற்கு பேரா மந்திரிபுசார் அகமட் பைசால் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார். அவரது மறைவு சிலிம் ரீவர் மக்களுக்கும் மற்றும் தஞசோங் மாலிம் அம்னோ டிவிசனுக்கும் பெரிய இழப்பு என்று அவர் சொன்னார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பதாக சினியில் இடைத்தேர்தல் நடைப்பெற்ற வேளை தற்பொழுது மீண்டும் மற்றொரு இடைத்தேர்தலை மலேசியா சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!