Latestமலேசியா

சுகாதாரம் – பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவீர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர்,.   23 – வழக்கமான பாரம்பரிய நடைமுறைகளுக்கு பதில் இவ்வாண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது சுகாதார மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும்படி பிரதமர் மொஹிடின்
யாசின்  கேட்டுக்கொண்டார்.

கோவிட் -19 நெருக்கடிக்கு  மத்தியில் இவ்வாண்டு நோன்புப் பெருநாளை மலேசியர்கள் கொண்டாடுகிறார்கள்.
இவ்வாண்டு வயதான பெரியவர்களிடம்  நாம் கை குலுக்க முடியாவிட்டாலும் அல்லது கட்டியணைத்து முத்தம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நாம் அவர்களை நேசிக்கவில்லை என்பதாக
அர்த்தம் இல்லை.

நாம் அவர்களை நேசிக்கிறோம் அதே  வேளையில் அவர்களை தொடுவதை தவிர்க்கிறோம் என தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முகைதின் யாசின் கூறினார்.

உங்களது வயதான தாய், தந்தை, மற்றுளம் பாட்டி ஆகியோரின் நலன்களில் அக்கறை செலுத்துங்கள்.  அவர்கள் covid-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். வயதானவர்கள் மற்றும் நமது அன்புக்குரியவர் களின் பாதுகாப்பை கருதி சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் அவர்களுக்கு கைகுலுக்குவதையும், முத்தம் கொடுப்பதையும் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தழுவிக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

கோவிட் – 19 தொற்று பரவுவதை தவிர்ப்பதற்கு நம்மையும்,நம்மை சுற்றி இருப்பவர்களின் உயிர்களையும் பாதுகாப்பதற்கு சில பாரம்பரிய நடைமுறைகளையும் பண்புகளையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

கோவிட் தொற்றை தடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு கட்டொழுங்கு மிகவும் அவசியமாகும். பொதுமக்கள் எல்லா வேளையிலும் தூய்மைக்கும் சுத்தத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணையத்தை அரசாங்கம் மீட்டுக் கொள்வதை முடிவு செய்வதற்கு முன்னர் தூய்மை மற்றும் சுத்தத்தைப் பேனுவதில்  பொதுமக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மொஹிடின் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!