Latestமலேசியா

சுயமான சுவாசக் கவச விதிமுறையை விதித்துக் கொள்ளாதீர்கள்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 24 – கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவு காலக்கட்டத்தின்போது சுகாதார அமைச்சு கூறாத சுயமான சுவாசக் கவச விதிமுறையை விதித்துக் கொள்ளாதீர்கள் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

போலிஸ், இராணூவம், நகரண்மைக் கழகம் அல்லது பேரங்காடிகளோ கட்டாயமாக சுவாசக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட முடியாது.
சில பேரங்காடிகளில் கட்டாயமாக சுவாசக் கவசம் அணிய வேண்டும் எனவும், அப்படி அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவிட்டுள்ளனர். அது தவறு. சுவாசக் கவசம் அணிய வலியுறுத்தலாமே தவிர வற்புறுத்தக்கூடாது.

சிலர் வீட்டுப் பகுதிகளில் அங்கு தங்கியிருப்பவர்கள் வெளியே போகவும் உள்ளே நுழையவும் தடை விதித்துள்ளனர். இது சட்டபடி குற்றம்.
சுகாதார அமைச்சு தேவை இருந்தால் மட்டும் சுவாசக் கவசத்தை அணியுமாறு கூறியிருப்பதை அவர் மீண்டும் நினைவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!