Latestமலேசியா

சென்னையில் சிக்கிக்கொண்ட 189 பயணிகள் இன்று காலை கோலாம்பூர் வந்துச் சேர்ந்தனர்

கோலாலம்பூர், மார்ச் 24 – சென்னையில் சிக்கிக்கொண்ட 189 மலேசியர்கள் இன்று ஏர் ஆசியாவின் AK12 விமானம் மூலம் கோலாலம்பூர் வந்துச் சேர்ந்தனர். ம.இ.காவின் செலவில் நேற்றிவுரவு KLIA விமான நிலையத்திலிந்து புறப்பட்ட அந்த விமானம் சென்னையில் சிக்கிக் கொண்ட மலேசிய பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் வந்தடைந்தது.

திருச்சியில் சிக்கிக்கொண்டுள்ள மலேசிய பயணிகளை கொண்டுச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு ஏர் ஆசியா விமானம் தரையிறங்குவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அந்த விமானப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியாக வெளிநாடுகளுக்கான விமானச் சேவையை நிறுத்திய இந்திய அரசாங்கம் மலேசியா உட்பட பல வெளிநாடுகளின் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கும் தடை உத்தரவை அமல்படுத்தியது . இதனால் ஏற்கனவே சென்னை மற்றும் இந்தியாவுக்கு சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணம் சென்றிருந்த மலேசியர்கள் திட்டமிட்ட நாளில் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்தனர். இதனிடையே இன்று தாயகம் வந்தடைந்த பலர் சரியான நேரத்தில் இதற்கான ஏற்பாட்டைச் செய்த ம.இ.காவுக்கும் அதன் தலைவர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!