Latestஇந்தியா

சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரத்தில் ஜூன்19 முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு

சென்னை, ஜூன் 15 – பெருநகர் சென்னை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19ஆம்தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவைர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்த மாவட்டங்களில் கோவிட் 19 தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதைத் தொடர்நது தமிழக அமைச்சரவையின் கூட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என முத முடிவு எடுக்கப்பட்டது. . மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் ஆகியவை வழக்கம போல் இயங்கும். வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும். ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும். வீட்டிலிருந்து 2 கி.மீ சுற்றளவு உள்ள பகுதிகளில் மட்டுமே மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.
தேனீர் கடைகள் திறக்காது உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் திறக்க அனுமதியில்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது. நிவாரண பொருட்கள் வீடு தேடி வரும்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அதேநேரம், 21 ஆம் தேதி, 28 ஆம் தேதி, இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. எந்த தளர்வும் இல்லை. இந்த நாட்களில் மருத்துவ அவசர நிலைக்கு தேவையான மருத்துவமனைகள், மருந்து கடைகள் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இயங்கும். பிற கடைகள் எதுவும் திறக்கப்படாது .
அலுவலக ஊழியர்கள் மாநில அரசு துறைகள், மத்திய அரசு துறைகளில் 33% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கும். தினமும் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வர சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லை. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், ஊடக பணியாளர்கள் போன்றோர் தினமும் பணிக்குச் செல்ல அனுமதி உண்டு. சென்னையில் இருந்து வெளியே பணிக்கு செல்வோர், ஒருமுறை பரிசோதனை நடத்திவிட்டு, பணியிடத்திலேயே தங்கி கொள்ள வேண்டும். இதே போலவே வெளியே இருந்து பணிக்கு வருபவரும் சென்னைக்கு உள்ளேயே, 12 நாட்களும் தங்கியிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!