Latestமலேசியா

செமினி குடிநுழைவு முகாமில் 21 பேர் உட்பட இன்று புதிதாக 48 பேருக்கு கோவிட் தொற்று

புத்ரா ஜெயா, மே 23 – இன்று நாட்டில் புதிதாக 48 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். இவர்களில் 21 பேர் செமினி குடிநுழைவு தடுப்பு முகாமைச் சேர்ந்தவர்கள். நால்வர் வெளிநாட்டிலிருந்து தொற்றுக்குள்ளாகி இங்கு வந்தவர்கள். இதர 25 பேர் மலேசியர் அல்லாதார். இவர்களில் 21 பேர் செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்வழி நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7,185ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் 1,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐவர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 53 பேர் நோயிலிருந்து குணமடைந்து தங்களது இல்லம் திரும்பினர். இதுவரை 5,912 பேர் முழுமையாக குணம் அடைந்துள்ளனர். புதிதாக மரணச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. மரண எண்ணிக்கை தொடர்ந்து 115ஆக இருந்து வருவதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!