Latestஉலகம்மலேசியா

சைவ உணவிற்கு மாறுவோம்; Covid 19 தாக்கத்தைத் தவிர்க்க PETA வலியுறுத்து 

கோலாலம்பூர், மே 26 – உலகையே ஆட்டிப் படைக்கும் Covid 19, இதற்கு முன் பரவிய SARS, MERS ஆகிய நோய்த் தொற்றுக் கிருமிகள்,  மிருங்கங்களிலிருந்து  உருவானதாக கூறப்படுவதால் சைவ உணவிற்கான முக்கியத்துவம் தற்போது பெருகி வருகிறது. பல இயக்கங்களும் தரப்புகளும் பொதுமக்கள் சைவ உணவிற்கு மாறுவதற்கு ஊக்கம் அளித்து வருவதோடு அதன் மகத்துவத்தையும் வலியுறுத்தி வருகின்றன.

அந்த வகையில்  சோயா தாவரத்தினால் தயாரிக்கப்படும்  TOFU  தஃவ்பு மற்றும் இதர சைவ உணவுகளை  உட்கொள்வதால் கோவிட் தொற்றை தவிர்க்க முடியும்  என PETA எனப்படும் பிராணிகள் நல நெறிமுறை  சங்கம் கூறியுள்ளதோடு தஃவ்புவினால்  கோவிட் வராது என்று கூறும் விளம்பர பிரச்சாரத்தையும்  அது  தொடங்கியுள்ளது.

இறைச்சி உணவுப் பொருட்கள்  நோய் தொற்றை உருவாக்கலாம் என்பதால்  அதனை தவிர்ப்பதற்கு சோயாவில்  செய்யப்படும் தஃவ்பு உட்கொள்வது  சிறப்பாக இருக்கும் என அச்சங்கம் கூறியுள்ளது.  கூட்டரசு நெடுஞ்சாலையில்  தஃவ்புவினால்  நோய்த் தொற்று ஏற்படாது என விளம்பர பலகைகளை  அச்சங்கம் வைத்துள்ளது.

பிராணிகள்  சம்பந்தப்பட்ட இறைச்சிகளை  உட்கொள்வதால் ஏற்படும் நோய்களால்  உலகம் முழுவதிலும்   ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைகின்றனர்.  எனவே இறைச்சியைத் தவிர்த்துவிட்டு  தஃவ்பு அல்லது சைவு உணவுகளை உட்கொள்வதற்கு  மக்கள் முன்வர வேண்டும் என  பெத்தா எனப்படும்  பிராணிகள்  நல நெறிமுறை சங்கத்தின்   மூத்த உதவி தலைவரான  ஜேசன் பேக்கர் கூறினார்.  உணவுகளில் சிறிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம்  தொற்றிலிருந்து அனைவரையும்  நாம் காப்பாற்ற முடியும்  என அவர் சொன்னார்.

ஆசியா முழுவதிலும் மார்க்கெட்டுகளில்  பிராணிகள் உயிருடனுடம் இறைச்சியாகவும் விற்கப்படுகின்றன. இவற்றினால் சுகாதாரமற்ற மற்றும் ஆரோக்கியற்ற சூழ்நிலை  மார்க்கெட் பகுதிகளில் காணமுடிகிறது.  இதற்கு முன் பரவிய    சுவைன் புளு மற்றும் ஏவியன் புளு ஆகிய தொற்றுக் காய்ச்சல் பன்றி மற்றும் கோழிகள் மூலம்  பரவியுள்ளது.  இறைச்சியைவிட தாவரங்கள்  மூலம் தயாரிக்கப்படும்  உணவுப் பொருட்களை  உட்கொள்வதால் உடலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது . இந்த வகை உணவுகளில் Cholosterol எனும் கொழுப்புச் சத்து குறைவு என்பதால் இருதய நோய்,  நீரிழிவு, புற்றுநோய் உட்பட உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் நம்மை தாக்குவதற்கான வாய்ப்பு குறையுமென்றும்   ஜேசன்  பேக்கர் தெரிவித்துள்ளார்..

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!