Latestஇந்தியாஉலகம்

சொத்துக்காக தாயின் நிர்வான படத்தை வாட்ஸாப்பில் பதிவேற்றம் செய்த மகன்

ராஜஸ்தான், மே 19 – பரம்பரை சொத்தை தன் மீது எழுதி வைக்க மறுத்த வயதான தன் தாயின் நிர்வான படத்தை படம்பிடித்த மகன் அதனை வாட்ஸாப் புலனத்தில் பதிவேற்றம் செய்துள்ளான். இக்கொடூர செயலைச் செய்த மகனுக்கு வயது 50 ஆகும். அந்த வாட்ஸாப் புலனத்தில் உறவினர்களும் இடம்பெற்றிருந்ததால் இச்செயல் அம்பமானது.

இச்சம்பவம் ராஜாஸ்தான் கோட்டா மாவட்டத்தில் நடந்துள்ளது. தன் தாயை மிரட்டுவதற்காக அவன் இச்செயலை செய்துள்ளான். போலிசார் அவனை கைது செய்துள்ளனர்.

20 நாட்களுக்கு முன்பு கணவனை இழந்த அந்த தாய் மே 13ஆம் திகதி பூஜை ஒன்றில் ஈடுபட்டுருந்த சமயத்தில், தன் மகன் தன் மீது ஏதோ ஒரு திரவியத்தை ஊற்றியதாகவும். அதனைத் தொடர்ந்து தனக்கு அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குளிக்கச் சென்ற போது தன் மகன் தன்னை நிர்வானமாக படம் எடுத்ததாக அந்த தாய் போலிசில் புகார் செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!