Latestமலேசியா

சொத்து தகராறு; அண்ணன் – அண்ணியை கொன்ற பின் தற்கொலை செய்துக் கொண்ட ஆடவன்

உலு சிலாங்கூர், மே 22 – சொத்துக்காக தனது அண்ணன் அண்ணியை காரில் மோதி பின் அவர்களை பாரங் கத்தியில் வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிய ஆடவன் ஒருவன் தமது காருடன் ஈயக்குட்டையில் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. இதற்கு முன் கம்போங் சுவாங் ராசாவில் ஒரு கோயிலுக்கு முன் தனது 65 வயது அண்ணனையும் மற்றும் 56 வயது அண்ணியையும் ஹோண்டா சி.90 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை தனது புரோட்டோன் ஈஸ்வாரா காரினால் மோதியுள்ளன்.
அதன் பிறகு 61 வயதான அந்த ஆடவன் அவர்களின் கால்களில் பாரங் கத்தியால் தாக்கிய பின் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். நேற்று காலை மணி 7.56 அளவில் அங்குள்ள கோயிலின் வேலியோரத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அந்த தம்பதியரைக் கண்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததாக உலு சிலாங்கூர் சூப்பிரடண்ட் அர்ஷாட் கமாருடின் கூறினார். அந்த சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய பாராங் கத்தி பெக்கான் ராசாவில் சாலை சுற்றுவட்டப் பகுதிக்கு அருகே கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த கத்தியின் கைப்பிடியில் கைரேகையும் காணப்பட்டதாக அர்ஷாட் கமாருடின் கூறினார்.
இதற்கிடையில் அந்த சந்தேகப் பேர்வழியின் சடலம் நேற்று நண்பகல் மணி 1.10 அளவில் அன்தாரா காபி பழைய ஈயக்குட்டை ஓரத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்த காரின் கதவு திறந்த நிலையில் காணப்பட்டதாகவும் அர்ஷாட் கமாருடின் தெரிவித்தார். அவனின் சடலம் கோலா குபுபாரு மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!