Latestமலேசியா

சொந்த ஊர்களில் சிக்கிக்கொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை

கோலாலம்பூர் மே  26 மாநிலங்களை கடந்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி நோன்புப் பெருநாள் விடுமுறையின் போது சொந்த கிராமத்திற்கு சென்று அங்கிருந்து திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டு வேலைக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் .

விடுமுறை கடிதம் சமர்ப்பிக்காமல் வேலைக்கு வர தவறும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து துறையின் தலைவர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குனர்  முகமட் கைருல் அடிப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரத் தவறினால் அல்லது வீட்டிலிருந்தவாறே வேலை செய்யத் தவறினால்  அவர்கள் பணியில் ஈடுபடவில்லை என்று கருதப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முகமட் கைருல் கூறினார்.

வேலைக்கு செல்ல முடியாமல் சொந்த ஊரில் சிக்கிக் கொண்டிருக்கும்  அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என வினவப்பட்டபோது அவர் இதனைக் கூறினார்.

1988 ஆம் ஆண்டின் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும்.நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியும் என முகமட்  கைருல் சுட்டிக்காட்டினார். இந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு பதவி உயர்வு  நிறுத்தடுவது உட்பட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாகக் கூடும்  அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!