Latestமலேசியா

ஜாமினுக்கான நீதிபதியின் உரிமைக்கு எதிராக குடும்ப மாது சுதா வழக்கு

கோலாலம்பூர், ஜூலை 15 –மரண தண்டனை விதிக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் குற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் குடும்ப மாதான சுதா ஜாமின் வழங்கும் விருப்புரிமையை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மே 16 ஆம் தேதியிலிருந்து காஜாங் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுதா கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த வழக்கு மனுவில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

அவது தமது வழக்கு மனுவில் அரசாங்க தரப்பு வழக்கறிஞரை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டுள்ளார். 33 வயதுடைய சுதாவும் 31 வயதுடைய அவரது கணவர் கே.ரவிக்குமாரும் ஷாபு அல்லது 175 கிரேம் மெத்தம்பெத்தமின் போதைப்பொருளை கடத்தியதாக கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் செராஸ் பண்டார் மகோத்தாவில் உள்ள வீடு ஒன்றில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது
போலீஸ் விசாரணையின்போது சுதா ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

தற்போது அவரது உறவினரின் பராமரிப்பில் அந்த குழந்தை இருந்து வருகிறது. ஜாமினில் தம்மை விடுவிக்க வேண்டும் என ஜூலை 3ஆம் தேதி ஷா அலாம் உயர்நீதிமன்றத்தில் அவர் செய்து கொண்ட முதலாவது முயற்சியல் தோல்வி கண்டார். சுதாவின் வழக்கு மனுவிற்கு ஆதரவாக அவரது வழக்கறிஞர் கேப்ரியல் சூசையன் சில வாதங்களையும் சமர்ப்பித்துள்ளார். சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் அவரது குழந்தைக்கு அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியாவில்லை. இதனால் மனோரீதியிலும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்றும் கேப்ரியல் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!