Latestமலேசியா

ஜாலான் ஈப்போ PPR அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு: 20 பேர் கைது

கோலாலம்பூர், மே 23 – ஜாலான் ஈப்போவில் PPR அடுக்குமாடி வீடமைப்பு பகுதியில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து 20 பேர் கைது செய்யப்பட்டனர். 30 ஆடவர்கள் இந்த தகராறில் சம்பந்தப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லஷிம் கூறினார்.
இந்த தகராறின்போது அந்த அடுக்குமாடி வீட்டிற்கு கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் சேதடைந்தன. மோட்டார் சைக்கியோட்டி ஒருவர் அங்குள்ள கார்களை மோதியதாக மஸ்லான் லஷிம் தெரிவித்தார். 10 குடும்ப உறுப்பினர்களிடேயே நேற்றிரவு 10.50 மணி அளவில் நடைற்ற தகராறில் குழு ஒன்று தலையிட்டதை தொடர்ந்து அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கைகலப்பு ஏற்பட்டது.
அங்குச் சென்ற போலீஸ் குழு 17 மற்றும் 33 வயதுடைய 20 நபர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மே 26ஆம் தேதி வரை தடுத்துவைக்கப்பட்டிருப்பர். ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டம் 48வது பிரிவின் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த கலவரத்தின்போது அந்த ஆடவர்களில் ஒருவர் இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் அடைந்தார்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!