Latestஉலகம்

ஜெர்மனி – நெதர்லாந்தை குறை கூறியது ஸ்பெய்ன்

மெட்ரிட், ஏப் 8- ஐரோப்பாவில் கோவிட்-19 வைரஸினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தொழில்மய மேம்பாடு அடைந்த இதர ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தை ஸ்பெய்ன் கடுமையாக சாடியது.

இப்போதைய நிலையில் ஸபெய்னும் இத்தாலியும் பெரிய அளவில் உயிரிழப்புக்களை சந்தித்துள்ளது. இந்த தொற்றினால் பெரிய அளவில் தொழில்துறைகளும் முடங்கிவிட்டன. ஆனால் பொருளாதார ரீதியிலான உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஜெர்மன் மற்றும் ஸ்பெய்ன் தொடர்ந்து மௌனம் காத்து வருவதை ஸ்பெய்ன் பிரதமர் PEDRO SANCHES சாடினார்.

ஸ்பெய்னில் கோவிட்-19 தொற்றின் காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 14,045 ஆக உயர்ந்தது. தற்போது அமெரிக்காவுக்கு அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெய்ன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 141,942பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!