Latestமலேசியா

ஜொகூரில் 22 மையங்களில் 1456 பேர் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்

ஜொகூர் பாரு, ஏப் 10 – ஜொகூர் மாநிலத்தில் 22 மையங்களில் சுமார் 1,456 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஜொகூர் மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக் குழு தலைவர் வித்தியானந்தன் தெரிவித்தார். அம்மாநிலத்தில் மட்டும் மொத்தம் 80 தனிமைப்படுத்தும் மையங்கள் அரசாங்கத்தால் தயார்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய 1,161 மலேசியர்கள், தப்லிக் சமய நிகழ்வில் கலந்துக் கொண்ட 150 பேர் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய 145 மாணவர்கள் ஆகியோர் இந்த 22 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் இந்தோனேசியா பாத்தாம் தீவிலிருந்து நாடு திரும்பிய 50 மலேசியர்கள் தம்போய் பண்டார் பாரு கூடாவிலுள்ள தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட இடத்திற்கு அவர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளதாகவும் வித்தியானந்தன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!