Latestமலேசியா

ஜோகூரில் இவ்வாண்டில் இதுவரை 20 பேர் டிங்கியினால் மரணம்

ஜோகூர் பாரு, ஜூலை 3 –ஜோகூரில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை டிங்கி காய்ச்சலில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆறு மாத காலத்தில் ஜோகூர் மாநிலத்தில் 5,107 பேர் டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர். வித்யானந்தன் கூறினார்,
கடந்த 26 வாரங்களில் 34 இடங்கள் டிங்கி பரவிய இடமாக அடையாளம் காணப்பட்டது. இதன்வழி மாநிலத்தில் மொத்தம் 91 இடங்கள் டிங்கி பரவும் இடங்களாக அதிகரித்திருப்பதாக வித்யானந்தன் வெளிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சுற்றுப்புற தூய்மை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுத்தத்தை அலட்சியப் படுத்துவதும் ஏடிஸ் கொசுக்கள் அதிகரித்து டிங்கி காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக அவர் கூறினார்.
அதோடு டிங்கி காய்ச்சலுக்கான அறிகுறி கண்டவர்கள் தாமதம் எதுவுமின்றி உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும்படியும் வித்யானந்தன் கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!