Latestமலேசியா

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் – மரணம் தொடர்பில் கடைசி சந்தேக நபர் சரண்

கோலாலம்பூர், ஜூன் 30 – வர்த்தகர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த 9வது மற்றொரு சந்தேகப் பேர்வழி நேற்று ரவாங் புக்கிட் புருந்தோங்கில் சரணடைந்தார். 28 வயதான அந்த ஆடவர் சரணடைந்ததன் மூலம் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் மற்றும் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உதவும் பொருட்டு அதில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேடப்பட்டு வந்த 9ஆவது சந்தேகப் பேர்வழியின் புகைப்படத்தை சிலாங்கூர் குற்றப்புலானாய்வுத்துறையின் தலைவர் பாட்ஷீல் அகமட் நேற்று வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ரவாங் கிரின்பார்க்கை சேர்ந்த அந்த சந்தேகப் பேர்வழி நேற்றிரவு போலீசில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன் ஒரு வர்த்தகரும் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவருமான டத்தோ பட்டம் கொண்ட பிரமுகர் உட்பட 5 இந்தியர்களுடன் ஒரு வங்காளதேசி மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்ப்ட்டிருந்தனர். தற்போது 9ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதால் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் மற்றும் மரணம் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணை ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டத்தோஸ்ரீ ஆறுமுகத்தின் உடலில் சவப் பரிசோதனை நாளை செய்யப்படும் என்பதால் அதன் பின்னர் சந்தேகப் பேர்வழிகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என கூறப்படுகிறது. கைது செய்ய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். .
பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானாவிலுள்ள விளையாட்டு மைதானத்தில் மெது நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஜூன் 10ஆம் தேதி காலை 10.30 மணியளவில் 55 வயது டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டு ரவாங் தாமான் கோசாஸில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தார். ஆறுமுகத்தை விடுவிப்பதற்கு கடத்தல்காரர்கள் 5கோடி சிங்கப்பூர் வெள்ளியை பிணைப்பணமாக கேட்டுள்ளனர். எனினும் ஆறுமுகத்தின் குடும்பத்தினர் பிணைப்பணம் எதனையும் கொடுக்கவில்லை. அவரது சடலம் ரவாங் பெஸ்தாரி ஜெயாவிலுள்ள புதருக்கு அருகே அழுகிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!