Latestமலேசியா

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் – கொலை பின்னணிக்கு காரணம் பணமே

கோலாலம்பூர், ஜூலை 1- வர்த்தகர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் மற்றும் கொலைக்கு பின்னணியாக இருந்ததற்கு பண விவகாரமே முக்கிய நோக்கமாக இருந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ ஹூசீர் முகமட் தெரிவித்தார். இதுகுறித்த மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. எனினும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்,
சவப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்காத நிலையில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள வங்காளதேச ஆடவனை கைது செய்ததைத் தொடர்ந்து 55 வயதுடைய வர்த்தகர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தப்பட்டு இதில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் பிடிப்பதில் போலீசார் வெற்றி பெற்றதாக ஹூசீர் முகமட் கூறினார்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் பண்டார் ஸ்ரீ டமன்சாராவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானாவிலுள்ள மைதானத்தில் மெது நடை பயிற்சியில் ஈடுபட்டபோது ஆறுமுகம் கடத்தப்பட்டார்.
இதனிடையே நைஜீரிய பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதன் தொடர்பில் விசாரணக்கு உதவும் பொருட்டு மேலும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 4ஆம் தேதியன்று செராசிலுள்ள ஆடவரை அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!