Latestமலேசியா

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் –கொலை பின்னணியாக செயல்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழியின் காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜூலை 3 – வர்த்தகர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் முக்கிய பின்னணியாக செயல்பட்ட சந்தேகப் பேர்வழி ஒருவர் மேலும் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடன் கைது செய்யப்பட்ட வங்காளதேச ஆடவரின் தடுப்பு காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்தேக பேர் வழியான அந்த டத்தோ பிரமுகரை மேலும் ஒரு வாரத்திற்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதே போன்று மற்றொரு சந்தேக பேர் வழியையும் தடுத்து வைத்திருப்பதற்கு போலீசார் அனுமதி பெற்றுள்ளனர். நேற்று இதர நான்கு சந்தேக பேர்வழிகளை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றனர்.
வர்த்தகர் ஆறுமுகம் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் இதுவரை 11 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு இந்தியர்களுடன் இதர நான்கு ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் பட்ஷீல் அகமட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். கடன்கள் அல்லது வர்த்தகம் தொடர்பான விவகாரம் குறித்து 55 வயதுடைய ஆறுமுகம் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கும் சாத்தியத்தை பட்ஷீல் அகமட் மறுக்கவில்லை.
தண்டனை சட்டத்தின் 302ஆவது விதி மற்றும் 1961ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் 3 (3) ஆவது விதியின் கீழ் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றன. ஜூன் 10ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா பண்டார் ஸ்ரீ டமன்சாராவில் ஜாலான் பெர்சியாரான விளையாட்டு மைதானத்தில் மெது நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டார்.
அவரது கடத்தல் தொடர்பாக முதலில் ஏழு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி ரவாங் பெஸ்தாரி ஜெயா காட்டில் புதருக்கு அருகே கண்டுப்பிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு 5கோடி சிங்கப்பூர் வெள்ளயை பிணைப்பணமாக கோரியதாக போலீஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. எனினும் கடத்தல்காரர்களுக்கு பிணைப்பணம் எதுவும் கொடுக்கபடவில்லை .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!