Latestமலேசியா

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் – கொலை ; இறுதி சடங்கில்ல நண்பர்கள் உட்பட பலர் பங்கேற்பு

கோலாலம்பூர், ஜூலை 7 – வர்த்தகர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் இன்று விசாரணைக்காக ரவாங்கிற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 55 வயதான ஆறுமுகம் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக இதுவரை 11 சந்தேகப் பேர்வழிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பின் சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என ஏற்கனவே சிலங்கூர் குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் பட்ஷீல் அகமட் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதனிடையே டத்தோஸ்ரீ ஆறுமுகத்தின் நல்லடக்க சடங்கு பண்டார் ஸ்ரீ டமன்சாராவில் உள்ள அவரது இல்லைத்தில் இன்று காலையில் நடைபெற்றது . அதன்பிறகு கெங்போங் இந்து மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

ஜூன் 10ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா பண்டார் ஸ்ரீ டமன்சாராவில் ஜாலான் பெர்சியாரான விளையாட்டு மைதானத்தில் மெது நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தப்பட்டார். அவரது கடத்தல் தொடர்பாக முதலில் ஏழு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி ரவாங் பெஸ்தாரி ஜெயா காட்டில் புதருக்கு அருகே அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு 5கோடி சிங்கப்பூர் வெள்ளயை பிணைப்பணமாக கோரியதாக போலீஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. எனினும் கடத்தல்காரர்களுக்கு பிணைப்பணம் எதுவும் கொடுக்கபடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!