Latestமலேசியா

டி.ஏ.பி அரசியல் தீவிரபோக்கை குறைத்துக்கொண்டதால் பாஸ் கட்சிக்கு ஏமாற்றம் – மகாதீர்

கோலாலம்பூர், மார்ச் 13- டி.ஏ.பி தனது அரசியல் தீவிரபோக்கை குறைத்துக்கொண்டதாக பாஸ் கட்சி ஏமாற்றம் அடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார். அரசியல் உண்மையை அல்லது நடப்பு அரசியல் நிலையை உணர்ந்து டி.ஏ.பி தனது தீவிரபோக்கை குறைத்துக்கொண்டது என அவர் கூறினார்.

அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என்பது எனது அனுமானம் மட்டும் அல்ல. அதுதான் உண்மையும்கூட என மகாதீர் கூறினார். சீன சமுகத்தை முன்னிறுத்தும் கட்சியாக டி.ஏ.பி இருந்தது. எனினும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப அந்த கட்சி தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது.

மலாய்க்கார்ர்கள் இன்றி வெற்றி பெமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும். எனவேதான் நடப்பு தேவைக்கு ஏற்ப டி.ஏ,பி கட்சியினர் தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர் என மகாதீர் சுட்டிக்காட்டினார்.  டி.ஏ.பி கோரிக்கை விடுத்திருந்தாலும் U.E.C எனப்படும் ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாம் கூறிவிட்டோம். இறுதியில் இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

டி.ஏ,பியின் பல கொள்கைகள் மாறிவிட்டன. இது எனது கருத்து மட்டும் அல்ல. அவர்களுடன் நெருங்கி பழகிய பிறகுதான் அவர்களது நிலையை நாம் தெரிந்துகொள்ள முடிந்த்து என மகாதீர் விவரித்தார்,

அதே வேளையில் தனது அரசியலுக்கு சமயத்தை ஒரு கருவியாக பாஸ் கட்சி பயன்படுத்தி வருவது தவறு என்றும் மகாதீர் சொன்னார். தமக்கு ஆதரவு தருவதாக கூறிவிட்டு பின்னர் மொஹிடினுக்கு ஆதரவு தந்தது பாஸ். வாக்குறுதி மீறிய அக்கட்சியின் மீது தமக்கு ஏமாற்றம் என்றும் மகாதீர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!