Latestமலேசியா

தனிப்பட்ட நலன்களுக்காக தகராறுகளையும் அரசியல் சூழ்ச்சிகளையும் நிறுத்துவீர் ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு, மே 14- ஜோகூர் சட்டமன்றக் கூட்டம் கடுமையான பாதுகாப்புக்கிடையே இன்று காலை கூடியது. சட்டமன்ற கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் தனிப்பட்ட நலன்களுக்காக தகராறுகளையும் அரசியல் சூழ்ச்சிகளையும் நிறுத்திக்கொண்டு அதிலிருந்து விலகியிருக்கும்டி அரசியல்வாதிகளை கேட்டுக்கொண்டார். அரசியல் தகராறுகளும் சூழ்ச்சியும் ஒரு புதுவகை வைரஸ் ஆகும். எனவே இந்த வைரஸ் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசியல் தகராறுகளும் சூழ்ச்சிகளும் கோவிட் -19 வைரஸைவிட மோசமான தொற்றாகும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நமது அரசியல் தலைவர்களிடையே இப்போது இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதோடு நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிரட்டலாக அமைந்துவிடும் என சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

அரசியல் சுயநலப் போக்கை கொண்டவர்கள் மக்களின் நலன்களை மறந்துவிடுவார்கள். மேலும் மக்களுக்கான பொறுப்புணர்வையும் அவர்கள் அலட்சியம் செய்துவிடுவதோடு பின்னர் அவர்களிடம் சுயநலப் போக்குதான் மேலோங்கியிருக்கும். எனவே இதிலிருந்து விடுபட்டு மக்கள் நலன்களுக்காக பாடுபடும்படி அரசியல்வாதிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!