Latestஇந்தியா

தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட 8 மலேசியர்கள்  புதுடெல்லியில் கைது

புதுடெல்லி,  ஏப்  5 -புதுடில்லியில் நிஷாமுடின் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற அனைத்துலக தப்லிக்  மாநாட்டில் கலந்துகொண்ட 8 மலேசியர்கள் புதுடெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

மலேசியாவுக்கு செல்லும் சிறப்பு விமானத்தில் ஏறவிருந்த  அந்த 8 பேரும்  கைது செய்யப்பட்டதை புது டெல்லி போலீசார் உறுதிப்படுத்தினர்.

மேல் விசாரணைக்காக இவர்கள் புதுடெல்லி போலீஸ் மற்றும் சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.

இவர்கள் அனைவரும் புதுடெல்லியில் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது.
தற்போது இந்தியாவில் கோவிட்  -19 வைரஸ் தொற்றுக்கு 1,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த மாதம் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.

அந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினர் உட்பட சுமார் 9000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாடு முடிந்த கையோடு இவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதால் கோவிட்- 19 வைரஸ் பரவுவதற்கு
காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சுற்றுப்பயணவிசாவில் வந்தவர்கள்  விதிமுறையை மீறி  சமய மாநாட்டில் கலந்துகொண்டதால் வெளிநாடுகளைச் சேர்ந்த  960 பேருக்கான விசா ரத்து செய்யப்பட்டதோடு அவர்களை இந்திய உள்துறை அமைச்சு கருப்புப் பட்டியலிட்டுள்ளது என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகம் ட்வீட்டரில் இவ்வாரம் தெரிவித்திருந்தது.

விசா விதிமுறையை மீறியதற்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டிற்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரலாம் என்றும் கூறப்பட்டது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!