Latestமலேசியா

தப்லிக் மாநாட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை பத்துமலை தைப்பூசத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை

கோலாலம்பூர்  மார்ச் 22

பத்துமலை தைப்பூசத்தில்  கலந்து கொண்டவர்கள் எவரும் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட  முதல் நபர் கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் சுமார் 14 ஆயிரம் பேர் கலந்துகொண்ட தப்லிக் சமய
மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார் என புருணை உறுதிப்படுத்தும்வரை  அப்படி ஒரு மாநாடு நடைபெற்றதை சுகாதாரத்துறை அறிந்திருக்கவில்லை என்றார் அவர்.

புருணையில் முதல் நபருக்கு
கோவிட்- 19 வைரஸ் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தப்லிக் மாநாட்டில் கலந்து
கொண்டவர்களை தேடி அவர்களை பரிசோதிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டதாக டாக்டர்  நோர் ஹிஷாம்  இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த  14,500 பிரதிநிதிகளும் 25 வெளிநாடுகளை சேர்ந்த இதர
1,500 பேரும் கலந்துகொண்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் 11,000 பேரை நாங்கள் தேடி கண்டுபிடித்து விட்டோம். 6,700 பேரிடம் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துள்ளோம். 820 பேருக்கு கோவிட்- 19 வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. பத்து பேரில் ஒருவருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் -19 வைரஸ் வைரஸினால் மொத்த  பாதிப்புக்கு உள்ளானவர்களில் 62 விழுக்காட்டினர் தப்லிக் மாநாட்டில் தொடர்பில் இருந்தவர்கள்.

இதுவரை
கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள 1306 பேரில் 743 பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை இது பிரதிநிதிக்கிறது.

தப்லிக் மாநாட்டைப் பொறுத்தவரை  கோவிட் -19 வைரஸ் பரவும் என எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதால் அது குறித்து நாங்களும் நினைக்கவில்லை. மார்ச் 9ஆம் தேதி புருணை
சுகாதாரத்துறை இயக்குனர் இதனை எங்களுக்கு தெரிவித்தார்   என டாக்டர் நோர் ஹிஷாம்  கூறினார்.

தப்லிக் சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்களது சொந்த மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். கிராமங்களில் தொழுகையில் அவர்கள் கூடுவார்கள் என்பதோடு கைகுலுக்கும் போதும்
அல்லது கோவிட்- 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தும்மினாலும் அந்த வைரஸ் பரவும் என்பதும் எங்களுக்கு தெரியும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!