Latestமலேசியா

தப்ளிக் சமய நிகழ்வில் கலந்துகொண்ட 9000 பேர் கோவிட் -19வைரஸ் பரிசோதனைக்கு வரவில்லை

கோலாலம்பூர், மார்ச் 22

கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் மஸ்ஜித்  ஜாமேக் பள்ளிவாசலில் நடைபெற்ற தப்ளிக் சமய நிகழ்வில் கலந்து கொண்ட குறைந்தது 9000 பேர் இன்னமும்  கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு வரவில்லை என
மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட 8,800க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நபர்களை போலீசார் கண்டறிவார்கள் என்றும்  ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் அவர்களை பரிசோதனை செய்வதற்காக போலீசார் அழைத்துச் செல்வார்கள் என இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்

8,800முதல் 9,000 தனிப்பட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.ஆனால் அந்த நபர்கள் இன்னும் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

இவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்திற்கும் சிக்கலை உருவாக்கி வருவதாக அவர் சொன்னார். இவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தால் அவர்களை கைதுசெய்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் கொண்டு செல்வார்கள் என இஸ்மாயில் சப்ரி கூறினார்.ர

அந்த சமயம் நிகழ்வுக்கு சென்ற ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களும
தாங்களாகவே முன்வந்து கோவிட்-19 வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளும்படியும் இஸ்மாயில் சப்ரி கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!