Latestஇந்தியா

தமிழகம் முழுவதிலும் நடமாட்ட கட்டுப்பாடு – 144 தடை உத்தரவு சென்னை

மார்ச் 23- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுக்கான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கோவிட் -19 வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
போர்க்கால அடிப்ப்படையில் கோவிட் -19 வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட எல்லைகள் மூடப்படும். 144 தடை உத்தரவு நாளை மாலை 6மணி முதல் இம்மாதம் 31ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

இந்தியாவில் 415 பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.. இந்த தொற்றினால் இந்தியாவில் இதுவரை 7 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் மராட்டிய மாநித்தில் மட்டும் 89பேர் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!