Latest

தமிழகம் வெறிச்சோடி கிடக்கிறது.

சென்னை   மார்ச் 22-

இந்தியா முழுவதும் சுயக்கட்டுப்பாடு ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகமும் வெறிச்சோடிக் கிடக்கிறது.

சென்னையில் மெரினா கடற்கரை,
பெசன்ட் நகர், திருவான்மியூர் உட்பட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்து வாகனங்களும், ஆட்டோக்களும்  ஓடவில்லை. தமிழகத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் சென்னையில் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் மேலும் மூவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த இருவருக்கும் நியூஸிலாந்தில் இருந்து திரும்பிய மற்றொரு நபருக்கும் கோவிட்-19 இருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் சிகிச்சை பெறும் அறுவரும் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் .நோய் பரவாமல் இருப்பதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!