Latestஇந்தியா

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா; மதுரையிலும் ஊரடங்கு

ஜூன் 23- தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ்-சை கட்டுபடுத்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவு முதல் மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுள்ளது.

7 நாள் ஊரடங்கின் போது மதுரையில் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதிகபட்சமாக, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே மக்கள் பயணித்து அத்தியவாசிய பொருட்களை வாங்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியேற கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலங்கங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்படுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகளவில் Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ள நிலையில் அங்கு மோசமாகி வரும் தொற்று பரவலால் விரைவில் அது மூன்றாவது இடத்திற்கு முன்னேறிவிடும் எனும் அச்சம் நிலவுகிறது.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440,450 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 13,540 பேருக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 312 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!