Latestமலேசியா

தலைக்கவசத்தினால் தாக்கப்பட்டு 80 வயது முதியவர் காயம் – போலீஸ் விசாரணை

ஜோர்ஜ்டவுன். ஏப் 6 – பண்டார் பாரு ஆயர் ஹீத்தாமில் நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தகராறின்போது  மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தாம் வைத்திருந்த தலைக் கவசத்தினால் 80 வயதுடைய முதியவரை தாக்கினார்.

ஓய்வு பெற்ற டாக்சி ஓட்டுனரான அந்த முதியவர் முகத்திலும் தலையிலும் காயத்திற்குள்ளானார்.  அந்த முதியவருக்கு தையல் போடப்பட்டதாக  ஜோர்ஜ் டவுன் ஓ.சி.பி.டி  ஏ.சி.பி  சோபியான்  சந்தோங் தெரிவித்தார்.  சாலை சந்திப்பில் அந்த முதியவரின் காரை அந்த மோட்டார்சைக்கிளோட்டி மோதியிருக்கிறார்.

காரிலிருந்து இறங்கிய அந்த முதியவர் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியை போலீசில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.  அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த நபர் தமது கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகியது.

காயம் விளைவித்தது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவாக ஏ.சி.பி   சோபியான் கூறினார். இதனிடையே  பாதுகாவலராக வேலை செய்துவரும் அந்த  35 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டியும்  மருத்துவமனையில்   சிகிச்சை பெற்றதாக  கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!