Latestஉலகம்

தாய்லாந்தில் 28 நாட்களாக எவருக்கும் கோவிட் தொற்று இல்லை; பயண கட்டுப்பாடுகளை குறைக்க முடிவு

பேங்காக் , ஜூன் 23- தாய்லாந்தில் கடந்த 28 நாட்களாக எவரும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகவில்லை. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டினர் தாய்லாந்திற்கு வருவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதற்கு அந்நாட்டின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வர்த்தக நிரவாகிகள், நிபுணர்கள், திறன்பெற்ற தொழிலாளர்கள், நிரந்தர குடியிருப்புவாசிகள் மற்றும் தாய்லாந்தில் வசித்துவரும் வெளிநாட்டியினர் மற்றும் மருத்துவ சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கோவிட் நெருக்கடி நிர்வாகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டினர் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் 14 நாட்கள் தனித்திருக்க வேண்டும். இதுவரை 700 வர்த்தக நிர்வாகிகள் , தொழில் திறனைக் கொண்ட 22,000 தொழிலாளர்கள், நிரந்த வசிப்பிடத் தகுதியைக் கொண்ட 2,000 பேர் மற்றும் 30,000 மருதுவ சுற்றுப்பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதனிடையே கூட்டங்களில் கலந்துகொள்வோர், அரசாங்கத்தின் விருந்தினர்கள், வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பான உடன்பாடுகளை செய்துகொள்பவர்கள் மற்றும் சுற்றுலா திட்டத்தின் கீழ் தாய்லாந்து வரும் சுற்றுலா பேராளர்கள் ஆகியோர் 14 நாட்கள் தனித்திருக்க வேண்டியதில்லை என அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!