Latestஇந்தியா

திருமணமான 2 நாளில் மணமகன் மரணம்; திருமணத்தில் கலந்து கொண்ட 113 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

பீகார், ஜூலை 3 – பீகாரில் திருமணத்திற்குப் பிறகு, மணமகன் ஒருவர் கோவிட் தொற்றால் காலமானதோடு மேலும், திருமணத்திற்கு வந்த 113 விருந்தினர்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15 ஜூன் மாதம் அத்திருமணம் ஒரு கிராமத்தில் நடைப்பெற்றது. அதில் 30 வயதுடைய அனில் குமார், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருமணமான இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோவிட் -19 தொற்று பரிசோதனை செய்யாமலேயே உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பயத்தில் அவசர அவசரமாக உடலை தகனம் செய்தனர். அவரது திருமண நாளில், மணமகனின் உடல் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததாக அறியப்படுகிறது.
மணமகனின் தந்தை ஒரு ஆசிரியர் என்பதால் திருமணத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான விருந்தினர்கள் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். மணமகனின் இறப்பிற்குப் பிறகு பல உறவினர்கள் கவலைப்படத் தொடங்கினர். இருந்த போதிலும் இது கோவிட் -19 காரணமாக இருக்காது என நம்பினர்.
ஆனால் சுகாதார அதிகாரிகள் அத்திருமண நிகழ்வில் பலரும் கலந்து கொண்டதை அறிந்து ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை அக்கிராமத்தில் சிறப்பு முகாமிட்டு சோதனை நடத்தினர். 364 எச்சில் மாதிரிகள் சோதிக்கப்பட்டபோது பலருக்கு கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதுவரை கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 113 பேரில் மணமகளுக்கு அத்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!