Latestமலேசியா

திருமணம் குறித்து கோயில் பராமரிப்பாளர் போலீஸாரிடம் பொய் சொன்னாரா? ஆலயத் தலைவர் மறுப்பு

செர்டாங், மே 26 –
ஞாயிற்றுக்கிழமை இந்து சடங்கு பூர்வமான திருமணம் நடத்தப்பட்ட விவகாரத்தில் covid-19 காலகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளை பின்பற்ற தவறியதை ஸ்ரீ கெம்பாங்ஙான் ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவர் வி செல்வம் ஒப்புக்கொண்டார்.

அதேவேளையில் இந்தத் திருமணம் தொடர்பான விவரங்களை வழங்குவதில் ஆலய பராமரிப்பாளர் பொய் சொன்னதாக போலீசார் கூறிய தகவலை அவர் மறுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் போலீசார் எங்களது ஆலயத்திற்கு வரவில்லை நேற்று காலையில் தான் இரண்டு போலீஸ்காரர்கள் ஆலயத்திற்கு வந்ததாக செல்வம் தெரிவித்தார்.

ஆலய குருக்களிடமும் ஆலய நிர்வாக குழு உறுப்பினர்களிடமும் நான் விசாரித்தேன் எவரும் ஆலயத்திற்கு வந்து இந்த திருமணம் தொடர்பாக விசாரிக்க வில்லை என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எது எப்படி இருந்தாலும் இந்த திருமணத்தை நடத்தியது தவறு என்பதை ஆலய நிர்வாகம் ஒப்புக் கொள்கிறது.
இதற்கான விளைவுகளை எதிர்நோக்குவதற்கு தாங்கள் தயாராய் இருப்பதாக செல்வம் கூறினார்.

அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களை ஆலய நிர்வாகம் போலீஸிடம் கொடுத்துள்ளது.
தொடக்கத்தில் இந்த திருமணத்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என நாங்கள் தெளிவாக கூறி விட்டோம் ஆனால் மணமகன் கேட்டுக்கொண்டதால் வேறுவழியின்றி இதற்கு அனுமதி வழங்கினோம்.

மணமகனின் பெற்றோர் கடந்த 20 ஆண்டு காலமாக இந்த ஆலயத்திற்கு வந்து போவதோடு பல நிகழ்ச்சிகளில் விடாமல் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அதிகம் வலியுறுத்தி கேட்டதால் நல்லெண்ண அடிப்படையில்தான் இந்த திருமணத்தை நடத்தினோம். எளிய முறையில் அர்ச்சனை திருமணமாக இது அமைந்தது. ஆலயத்தில் அலங்காரம் செய்யப்படவில்லை திருமணத்தின் போது நாதஸ்வரம் கூட இடம்பெறவில்லை.வந்திருந்த அனைவருக்கும் கைகளை சுத்தப்படுத்துவதற்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியும் அனுசரிக்கப்பட்டது என செல்வம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!