Latestமலேசியா

திவ்யநாயகி தற்கொலை விவகாரம் பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை

பினாங்கு மே 26

திவ்ய நாயகி தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு முகநூலில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பதிவேற்றம் செய்த விவகாரம் தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் திவ்யா நாயகியின் குடும்பத்தினரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் சகாபுடின் அப்துல் மானான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

திவ்யா நாயகியின் சகோதரர் செய்திருக்கும் புகாரின் அடிப்படையில் முகநூலில் பகடிவதை அம்சங்கள் காணப்பட்டது தெரியவந்திருப்பதாக அவர் கூறினார்.

திவ்யநாயகி தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டுகோலாக இருந்த ஜோக்கர் ஒருவனின் முகநூல் கணக்கின் விவரங்களை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடமிருந்து பெறுவதற்கும் போலீசார் காத்திருப்பதாகவும் ஷஹாபுடின் தெரிவித்தார். இந்த விவகாரத்தை துரிதப்படுத்தும்படி நாங்கள்மலேசியா தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் ஜோக்கர் ஒருவனைப் பற்றிய ஆக்கபூர்வமான அடையாளத்தை நாங்கள் பெற முடியும் என அவர் கூறினார்.

20 வயது உடைய திவ்யநாயகி பினாங்கில் உள்ள செவன் லெவன் கடையில் வேலை செய்து வந்தார். தமது பணியாளர் ஒருவருடன் அவர்‌ செய்திருந்த
டிக் டாக் காணொளியை மற்றொரு பணியாளர் வெளியிட்டிருக்கிறார்.
இந்த காணொளியை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்த ஜோக்கர் ஒருவன் அதில்
திவ்யநாயகி குறித்து மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த காணொளியையும் மோசமான விமர்சனங்களையும் அகற்றும்படி பலமுறை திவ்யநாயகியும் அவரது குடும்பத்தினரும் வலியுறுத்தியும் ஜோக்கர் ஒருவன் மறுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யநாயகி தமது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே தற்கொலைக்கு தூண்டிய குற்றம் தொடர்பில் ஜோக்கர் ஒருவன் முகநூல் பக்கத்தை நடத்தி வந்த நபருக்கு எதிராக விரைவான விசாரணை நடத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட வேண்டுமென மலேசிய கணினி குற்றம் தொடர்பான பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திவ்யநாயகி தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டுகோலாக இருந்த ஜோக்கர் ஒருவனின் முகநூல் கணக்கின் விவரங்களை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திடமிருந்து பெறுவதற்கும் போலீசார் காத்திருப்பதாகவும் ஷஹாபுடின் தெரிவித்தார். இந்த விவகாரத்தை துரிதப்படுத்தும்படி நாங்கள்மலேசியா தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் ஜோக்கர் ஒருவனைப் பற்றிய ஆக்கபூர்வமான அடையாளத்தை நாங்கள் பெற முடியும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!