Latestஇந்தியா

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ,அன்பழகன் காலமானார் கோவிட் தொற்றுக்கு உள்ளான முதல் MLA

சென்னை, ஜூன் 10 – கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8,05 மணியளவில் அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கோவிட் தொற்றினால் மரணம் அடைந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆவார். 62 வயதுடைய அன்பழகன் தமது பிறந்த நாளான இன்று ஜூன் 10ஆம் தேதி காலமானது அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்பழகன் சென்னை திருவல்லிக்கேனி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தி.மு.கவின் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். அவர் மூன்று முறை திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். காலஞ்சென்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் திகழ்ந்தவர்.
ஜூன் 2ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் ஏற்கனவே கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். தி.மு.கவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக அன்பழகன் விளங்கி வந்தார். அடிக்கடி தமது கருத்துக்களை முகநூல் , டிவிட்டர் என சமுக வலைத்தளங்களில் தெரிவித்து வந்த தலைவர்களில் ஒருவராகவும் ஜெ,அன்பழகன் விளங்கினார். தி.மு.க அரசியல்வாதியாக மட்டுமின்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என்ற அறிமுகமும் அன்பழகனுக்கு உண்டு. 2013ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும் , யாருடா மகேஷ் என்ற படத்திற்கு வினியோகஸ்தராகவும் அன்பழகன் இருந்துள்ளார்.
அவரது மரணம் திமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் மு.க ஸ்டாலின் , தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிசாமி ஆகியேரும் தங்களது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!