Latestமலேசியா

தீ வைப்பு சம்பவத்தில் இரு மோட்டார் சைக்கிள்களை இழந்த கணேஷ்

கோலாலம்பூர், ஜூலை 7 – தமது திறமை, விடா முயற்சி மற்றும் பொறுமை காரணமாக இயற்கை உணவு தொழில் முனைவரின் பாராட்டை பெற்றதைத் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த பகுதி நேர பட்டுவாடா பணியாளரான கணேஷ் தமக்கு சொந்தமான இரு மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்த வேதனையில் இப்போது இருக்கிறார்.

தமது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை தீவைப்பு சம்பவத்தினால் அவர் இழந்துள்ளார். இந்த துயரமான செய்தியை கணேஷ் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். தமது வாழ்வதாரத்திற்கு பெரும் துணையாக இருந்து வந்த அந்த இரண்டு மோட்டார சைக்கிள்கள் சில பொறுப்பற்ற நபர்களின் தீவைப்பு சம்பவத்திற்கு உள்ளானதால் பெரும் வேதனையில் கணேஷ் இருந்து வருகிறார். நேற்று கோம்பாக் செத்தியா பிபி,ஆர் வீட்டைப்பு பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் பகுதியில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் அவரது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன.

விடியற்காலை ஏற்பட்ட அந்த சம்பவத்தில் 8 கார்கள் 60 விழுக்காடு சேதமடைந்தன. 53 மோட்டார் சைக்கிள்கள் தீயில் முழுமையாக அழிந்தன. இரண்டு தரப்புகளிடையே ஏற்பட்ட தகராறினால் இந்த தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தீயணைப்பு படையின் பேச்சாளர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். சில பொறுப்பற்ற நபர்களின் இந்த செய்கையினால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பாருங்கள் என பெரும் வேதனையோடு கணேஷ் தெரிவித்தார். எனினும் வாழ்க்கையை சமாளிக்க வேண்டியிருக்கிறது. துணிச்சலோடு எதிர்நீச்சல் போடுவதைத் தவிர வேறு வழியில்லையென அவர் நம்பிக்கையோடு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!