Latestமலேசியா

துணைப்பிரதமர் பதவிக்கு அம்னோ குறியா? ஸாஹிட் மறுப்பு

கோலாலம்பூர் , மார்ச் 6- துணைப்பிரதமர் பதவிக்கு அம்னோ குறிவைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அக்கட்சியின் தலைவரான அகமட் ஸாஹிட் ஹமிடி மறுத்தார்.

அமைச்சரவைப் பதவிகளுக்குப் பரிசீலிப்பதற்காக தேசிய முன்னணியின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைப் புதிய பிரதமர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசினிடம் தாம் சமர்ப்பித்துள்ளதாக தேசிய முன்னணி தலைவருமான ஸாஹிட் தெரிவித்தார். அம்னோ மற்றும் தேசிய முன்னணி வழங்கியிருக்கும் பட்டியலில் சில பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பதை முடிவு செய்வது பிரதமரின் பிரத்தியோக உரிமைக்கு உட்பட்டதாகும் என அவர் சொன்னார்.

தமக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஸாஹிட் இத்தகவலை வெளியிட்டார். ஆக்கால்புடி அறநிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை முன்னாள் துணைப்பிரதமருமான ஸாஹிட் எதிர்நோக்கியுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!