Latestமலேசியா

தேசிய பாதுகாப்பு மன்றத்தை அன்வார் சாடினார்

கோலாலம்பூர், மார்ச் 18- மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்மாறான அறிக்கைகளை வெளியிட்டுவரும் தேசிய நடவடிக்கை மன்றத்தை அன்வார் இப்ராஹிம் சாடினார். இன்று அமல்படுத்தப்பட்ட மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்துவரும் தொழிலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய நடவடிக்கை மன்றத்தின் அறிக்கை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவசர நிலையைப் போன்ற சூழ்நிலையைக் கொண்ட நெருக்கடியை நாம் எதிர்நோக்கியுள்ளோம். எனவே நாம் முன்கூட்ட்டியே திட்டமிட வேண்டும். பிரதமரும் அமைச்சர்களும் ஒன்றாக அமர்ந்து எதை அமல்படுத்த வேண்டும் என்பதில் குழப்பமின்றி புரிந்துணர்வை கொண்டிருக்க வேண்டும் என அன்வ்வார் வலியுறுத்தினார்.

அமைச்ச்ர்கள் ராடாரிலிருந்து காணாமல்போய்விட்டனர். மக்களின் கவலயை புரிந்துகொள்வதற்கு எத்தனை அமைச்சர்கள் அவர்களை சந்தித்துள்ளனர் என அன்வார் வினவினார். தமது முகநூலின் நேரலை ஒளிபரப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர்துறையின் கீழ் செயல்படும் தேசிய நடவடிக்கை மன்றம் கோவிட் -19 வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் உயரிய அமைப்பாக திகழ வேண்டும். சொந்த ஊருக்கு திரும்பி செல்லும்படி பல்கலைக்கழக மாணவர்களை கேட்டுக்கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கையினால் மேலும் அதிகமானோர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என அன்வார் நினைவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!