Latestமலேசியா

தொண்டையில் மிட்டாய் மாட்டி 4 வயது சிறுவன் மரணம்

லாபுவான், மே 22 – லாபுவான் கம்போங் பத்து மணிகாரில் தொண்டையில் மிட்டாய் சிக்கிக் கொண்டதால் 4 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழ்மை இரவு நடந்துள்ளது.
இரவு 10 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, அச்சிறுவன் பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்ததாக லாபுவான் போலிஸ் தலைவர் சூப்ரிடன்டன் பாரிட் அகமட் தெரிவித்தார்.
முதல் கட்ட விசாரணையில், அச்சிறுவன் மிட்டாய் கேட்டதாகவும், கொடுக்கப்பட்ட பின உடனடியக வாயில் அதனை போட்டு முழுங்கியதாக தெரியவந்துள்ளது. முச்சு விடுவதற்கு அச்சிறுவன் சிரமப்பட்டதை பார்த்தபின்னரே மிட்டாய் தொண்டையில் சிக்கிக் கொண்டதை அச்சிறுவனின் தாய் உணர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
அச்சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!