Latestவிளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக மீண்டும் கராத்தேவுக்கு திரும்புகிறார் ஷகிலா ஷாலினி

கோலாலம்பூர், ஜூன் 20 – ஆசிய விளையாட்டுப் போட்டியின் கராத்தே சாம்பியனான ஷகிலா ஷாலினி ஜெப்ரி கிருஷ்ணன் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற வேண்டும் என்ற இலக்கோடு மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.
கடந்த செம்டம்பர் மாதம் தேசிய காரத்தே குழுவிலிருந்து விலகிய ஷாலினி 9 மாத இடைவெளிக்குப் இப்போது கராத்தே தற்காப்பு கலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை 27 வயதுடைய ஷகிலா கொண்டுள்ளார்.
உலக நிலையிலான கராத்தே வீராங்கனை என்ற முத்திரையை பதிப்பதற்கு ஒலிம்பிக் போட்டி முக்கிய களமாக இருக்கும். கராத்தே எனது இரத்தத்தோடு கலந்தவிட்டது. அனைத்து தடைகளையும் கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதுதான் எனது இலக்காக இருக்கிறது என ஷகிலா தெரிவித்தார். . தற்போது தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பயிற்சிகளில் கவனம் செலுத்தி வரும் ஷகிலா முதலில் அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்பதற்கு தேர்வு பெறுவதற்கு முழு மூக்சுடன் போராட வேண்டியிருப்பதாக 2017அம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற சீ போட்டியில் தங்கம் வென்றவரான ஷகிலா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!