Latestசினிமா

நடிகர் காஷந்த் சிங் ராஜ்புட் தூக்கில் தொங்கி தற்கொலை

மும்பை, ஜூன் 14- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழக்கை வரலாற்று படமான M.S Dhoni , the Untold Story திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் பாரட்டை பெற்றவரான பொலிவூட் நடிகர் கஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார். மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் கஷாந்த் சிங் தூக்கிலிட்டுக்கொண்டதை போலீசார உறுதிப்படுத்தினர். இது தொடரபாக மும்பை போலீஸ் விசாரணையை தொடங்கியிருப்பதாக போலீஸ் அதிகாரி அபிஷேக் திரிமுகே தெரிவித்தார்.
34 வயதுடைய கஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பொலிவூட் திரைப்பட உலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இவரது மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. தொடக்கத்தில் தொலைக்காட்சியில் டான்ஸ் ரியலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் கஷாந்த் சிங் பிரபலமானார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து விலகி 2011ஆம் ஆண்டு முதல் அவர் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார். பொலிவூட் திரை உலகில் அவரது பிரவேசம் சிறிது காலமாக இருந்தாலும் ராஜ்குமார், ஹிரானி, அபிஷேக் காபுர் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!