Latestமலேசியா

நாசி லெமாக் விற்ற & வாங்கிய 24 பேருக்கு 3 மாதத்திற்கு சமுக சேவை செய்ய தண்டனை

ஜோர்ஜ் டவுன், ஏப் 6 – நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி நாசி லெமாக் வாங்கிய 22 பேருக்கு 3 மாத காலத்திற்கு சமுக சேவை செய்யும்படி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.   தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டத்தின் 11 (1) விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதோடு நாசி லெமாக் விற்பனை செய்த இருவருக்கும் 3 மாத காலத்திற்கு சமுக சேவை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இன்று விடியற்காலை   2 மணியளவில் பாலேக் பூலாவ் சுங்கை பினாங்கில் ஒரு வீட்டில் நாசிக் லெமாக் விற்பனை செய்த இருவரிடம்   நாசி லெமாக் வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

தினசரி 3 மணி நேரம் என மூன்று மாதத்திற்கு அவர்கள்  சமுக சேவையில்  ஈடுபட வேண்டும். கூடிய விரைவில் சமுக சேவை பணிகளை தொடங்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதனிடையே இந்த கும்பலில்  பதின்ம வயதைச் சேர்ந்த  எழுவரின் நிலை குறித்து  ஜூன் மாதம் 18ஆம்  தேதி தெரியவரும்  என  தென் மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர்  அன்பழகன்   தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!