Latestமலேசியா

நாடாளுமன்றம் தொடங்கப்பட்டு முதல்முறையாக சபாநாயகர் 7 நிமிடம் தாமதம் – அதிருப்தியில் நாடாளுமன்றத்தில் கூச்சல

கோலாலம்பூர், ஜூலை 15 – மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற அமர்வு தொடங்கப்பட்டு சபாநாயகரின் இருக்கை 7 நிமிடத்திற்கு காலியாக இருந்ததால் நாடாளுமன்றத்தில் கூச்சல் எழுந்தது.

பிரதமர் உட்பட இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிட்ட நிலையில், துணை சபாநாயகர் அஸாலினா ஓத்மான் சபாநாயகர் இருக்கையில் இல்லாததைக் கண்டு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் ‘பிரதமரே வந்து விட்டார், சபாநயகரை காணவில்லை. இதற்குதான் சபாநாயகரை மாற்றக்கூடாது. பிரதமர் காத்திருக்கிறார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது அவமானப்படுத்துவதுபோல இருக்கிறது. இதுதான் பெரிக்காதான் நேஷனல் அரசாங்கத்தை நடத்தும் விதமா ?’ என கூறினார்.

அவரைத் தொடர்ந்து, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர். அஸாலினா பின்கதவுக்கான சாவையை தேடிக் கொண்டிருக்கிறார் என கிண்டடித்தார்.இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுமை இழந்து, இன்று நாடாளுமன்ற அமர்வு இருக்கிறதா இல்லையா எனவும் கேள்விகளை எழுப்பினர்.

இதனிடையே, அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் அஸாலினா தாமதமாக வந்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை மாற்றப்பட்டதே காரணம் என கூறியதற்கு இதற்கும் அவர் தாமதாக வந்ததற்கும் என்ன காரணம் என சிலர் கிண்டலடித்தனர். நாடாளுமன்ற இருக்கைகளின் மாற்றம் குறித்து திங்கட்கிழமையே தெரிவிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!