Latestமலேசியா

நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாத எம்.பிக்களின் பதவி பறிபோகும்

கோலாலம்பூர், ஏப் 28 – மே 18ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி அல்லது தொகுதியை இழக்க வேண்டியிருக்கும் என டி.ஏ.பியின் தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் இதனைத் தெரிவித்தார்.

எனவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என டி.ஏ.பியின் நாடாளுமன்ற தலைமை கொறடாவான அந்தோனி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக டி.ஏ.பி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் எம்.பிக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார். நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்குள் கூடவேண்டும். மேலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாட்டால் அவர்களது தொகுதி காலியாகிவிடும். அதன்பின் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அந்தோனி லோக் சுட்டிக்காட்டினார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஆகக்கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பின் ஆறு மாதங்களுக்கு மேற்போகாமல் மாட்சிமை தங்கிய பேரரசர் புதிய நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆகக்கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!